முகப்பு
தமிழ்நாடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு விசாரணை பாரபட்சமற்று இருக்க வேண்டும்: காதர்மொய்தீன்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கின் விசாரணை பாரபட்சமற்று இருக்க வேண்டுமென காதர்மொய்தீன் வலியுறுத்தினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:56 AM
பகிர்:

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கின் விசாரணை பாரபட்சமற்று இருக்க வேண்டுமென காதர்மொய்தீன் வலியுறுத்தினார்.

கடலூர் கோண்டூரில் உள்ள டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வீட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் இன்று வந்திருந்தார். அங்கு விஷ்ணுபிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மரணம் காவல்துறையின் மீது மிகப்பெரிய அளவில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்து உயர்நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் பாடுபட்ட விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக்கொள்ள சாத்தியமில்லை. அவர் உயர் அதிகாரிகளின் நெருக்கடியினால் தான் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணையே போதுமென கூறியுள்ளது. சிபிசிஐடி விசாரணை பாரபட்சம் இல்லாமல், விஷ்ணுபிரியாவின் மரணத்தில் உள்ள மர்மம், வினாக்கள், சந்தேகங்களுக்கு தீர்வு காண வேண்டும். சிபிசிஐடியின் அறிக்கை பாரபட்சம் இல்லாததாக வெளிவந்தால் காவல்துறை மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறும். இல்லையெனில் மக்கள் காவல்துறை மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.

பாரபட்சமான அறிக்கை வெளிவந்தால் அப்போது நாங்கள் சிபிஐ விசாரணையை வலியுறுத்துவோம் என்றார். உடன் மாநில பொதுச்செயலர் அபுபக்கர், துணைத்தலைவர் சபீக்ரகுமான் உள்ளிட்டோர் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →