முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 2 பேர் கைது

விருதுநகர் அருகே நிலத்தகராறில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை போலீஸார் 2 பேரை இன்று கைது செய்தனர்.

Updated On : 11 அக்டோபர், 2015 at 6:59 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:26 PM

விருதுநகர் அருகே நிலத்தகராறில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை போலீஸார் 2 பேரை இன்று கைது செய்தனர்.

விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசனின் வளர்ப்பு மகன் கணேசன்(44). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் சகோதரரி மகன்களான வரதராஜ், வேலுச்சாமி, கண்ணன் ஆகியோருக்கு நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். அதோடு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையே கணேசன் பிரச்னைக்குரிய 23 ஏக்கர் நிலத்தை மதுரை கீழபனங்காடியைச் சேர்ந்த ஜெயபால், முனியசாமி ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது, நிலத்தை மனைகளாக்கி விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஜெயபால், முனியசாமி, கணேசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ஜெயபால் மட்டும் மதுரைக்கு சென்றாராம்.

Advertisement

இதில், கணேசனும், முனியசாமியும் நிலப்பகுதி வரையில் சென்று தாமதமாக பாலவநத்தம் சென்றனர். அப்போது, அங்கிருந்த கண்ணன் தகராறு செய்தாராம். பின்னர் சிறிது நேரத்தில் வாகனத்தில் வீடுகளுக்கு சென்ற போது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வழிமறித்து கணேசனை பாலவநத்தம் நுழைவு பகுதியிலும்,   தப்பித்து ஓட முயற்சித்த மதுரை முனியசாமியை சிறிது தூரத்தில் தனியார் பள்ளி அருகே வெட்டியும் கொலை செய்தனர்.

இது குறித்து கணேசனின் மனைவி உமாமகேஸ்வரி அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் உறவினர்கள் 2 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கண்ணன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து கொலைசம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.