முகப்பு
தமிழ்நாடு

ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் சங்க கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 அக்டோபர், 2015 at 7:30 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:27 PM

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட கிளைக் கூட்டத்திற்கு செயலாளர் என்.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட ராமசுப்பு, மாவட்ட செயலாளர் எம்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணைச்செயலாளர்கள் சுவசுப்பிரமணியன், இளையபெருமாள், பி.நடராஜன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். நிறைவாக மாவட்ட துணைச்செயலாளர் என்.சிவா நன்றி கூறினார்.
 

இக்கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தனியாக பயனித்தால் மட்டுமே ரயில் கட்டண சலுகை உண்டென்றும், குடும்பத்தினருடனோ மற்றவர்களுடனோ பயணித்தால் கட்டண சலுகை கிடையாது என்ற ரயில் துறையின் உத்தரவை கூட்டம் கண்டனம் செய்கிறது.
 

Advertisement

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை விரிவுப்படுத்தி அளிப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.