முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே தூங்கியவர் மீது கல் வீசியதில் படுகாயம்

விகுதுநகர் அருகே நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கல் வீசி தாக்கியதில் காயம் அடைந்தார். 

Updated On : 13 அக்டோபர், 2015 at 8:08 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:27 PM

விகுதுநகர் அருகே நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கல் வீசி தாக்கியதில் காயம் அடைந்தார். 

விருதுநகர் அருகே காமராஜர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதம்(60). இவருக்கு சொந்தமாக 8 வீடுகள் உள்ளன. அதில், 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளாராம். இதிலுள்ள ஒரு வீட்டில் ஜெயராஜ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அதேபோல், எதிரில் குடியிருக்கும் பால்பாண்டியின் மகனான ராஜேஷிற்கும், ஜெயராஜ் மகள் குருதனலட்சுமிக்கும் தகாத உறவு இருந்ததாம். இதை ஒரு முறை பார்த்து அற்புதம் கண்டித்தாராம்.

இதையடுத்து, ஜெயராஜ் குடும்பத்தை காலி செய்யவும் வலியுறுத்தினாராம். அதைத் தொடர்ந்து அவரும் வீட்டை காலி செய்துள்ளார். இந்நிலையில் அற்புதம் திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது நள்ளிரவில் இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் அற்புதம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.