பெண் காவலருக்கு தொல்லை கொடுத்த காவல் அமைச்சுப் பணியாளர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை கொடுத்த, மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடுபெண் காவலருக்கு தொல்லை கொடுத்த காவல் அமைச்சுப் பணியாளர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை கொடுத்த, மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை கொடுத்த, மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முத்துமாரி (27). இவர் திருச்சி, துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வீரவேலு (32) சென்னை மாநகர காவல் ஆயுதப்படையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் உண்டு.
தேனி மாவட்டம், பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பதினெட்டான் மகன் ராஜேஸ்கண்ணா (35). இவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தபோது, காவலர் முத்துமாரிக்கு தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்கண்ணா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாறுதலாகி வந்துள்ளார்.
இந்நிலையில் முத்துமாரியும் அவரது கணவரும் மருத்துவ விடுப்பில் குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார்கள். வியாழக்கிழமை வீட்டில் குடும்பத்தார் எல்லோரும் இருந்த நேரத்தில் வீட்டிற்கு ராஜேஸ்கண்ணா வந்துள்ளார். முத்துமாரியை இரண்டாம் தராமாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு முத்துமாரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஸ்கண்ணாவைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தினர். நீதிபதி பசும்பொன் சண்முகையா, ராஜேஸ்கண்ணாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.