முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் வீடு புகுந்து 8 பவுன் செயின், மடிக்கணினி திருட்டு

விருதுநகரில் வீடு புகுந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தமிழ்நாடு

விருதுநகரில் வீடு புகுந்து 8 பவுன் செயின், மடிக்கணினி திருட்டு

விருதுநகரில் வீடு புகுந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:59 AM
பகிர்:

விருதுநகரில் வீடு புகுந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

விருதுநகர், சத்தியசாயி நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (42). இவர் வெளியே செல்லும் போது வீட்டைப் பூட்டி சாவியை வெளியே உள்ள அம்மிக்கல்லுக்கு கீழே வழக்கமாக வைத்துச் செல்வாராம். இம் மாதம் 4-ம் தேதி இதே போல வெளியே சென்றிருந்துள்ளார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது சாவி அதே இடத்தில் இருந்துள்ளது. சாவியைத் திறந்து உள்ளே சென்று முத்துலட்சுமி பார்த்தபோது, யாரோ சாவியை எடுத்து திறந்து பீரோவில் இருந்த எட்டே கால் பவுன் தங்க நகைகள், மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது.

இது குறித்து பாண்டியன் நகர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →