மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர், விடுதி காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு
சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடுமாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர், விடுதி காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு
சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணை விடுதிக்காப்பாளர்: இடைநிலை ஆசிரியர் பட்டப் படிப்புடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் படிப்பு. வயது வரம்பு கிடையாது.
இடைநிலை ஆசிரியர் பணியிடம்: இடைநிலை ஆசிரியர் பட்டப் படிப்புடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்ச்சித்தாள்-1. வயது வரம்பு கிடையாது.
பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், கணினி அறிவியல்): சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டப் படிப்புடன், சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்ச்சித்தாள்-11. வயது வரம்பு கிடையாது.
குறிப்பிட்ட கல்வித் தகுதியுள்ள விருதுநகர் மாவட்ட பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றுடன் 26.10.2015 -ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விவரத்தினை உறுதி செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அடையாள அட்டையை www.tnvelaivannippu.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.