பொதுப் பாதை பிரச்னையில் பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுப் பாதைப் பிரச்னையில் பெண்ணைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக ஒருவரை
தமிழ்நாடுபொதுப் பாதை பிரச்னையில் பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுப் பாதைப் பிரச்னையில் பெண்ணைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக ஒருவரை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுப் பாதைப் பிரச்னையில் பெண்ணைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூவாணி-சங்கரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வே.முனியாண்டி (55). இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் ராமசாமி மகன் ராம்குமார் என்பவர் குடும்பத்திற்கும் பொதுப் பாதை தொடர்பான பிரச்னையில் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை முனியாண்டியின் பேரப்பிள்ளைகள் குறிப்பிட்ட பாதையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது ரா.ராம்குமார் (24), ரா.மோகன்ராஜ், ரா.ராம்பிரசாத் ஆகியோர் சேர்ந்து குழந்தைகளைச் சத்தம் போட்டுள்ளார்கள். அதனை முனியாண்டியும் அவரது மகள் முத்துமாரியும் தட்டிக் கேட்டுள்ளார்கள். இதில் ஆத்திரமுற்ற முவரும் சேர்ந்து முத்துமாரியை கை மற்றும் கம்பால் தாக்கி காயப்படுத்தி, துணியைக் கிழித்து அவமானப்படுத்தியுள்ளார்கள். காயமுற்ற அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் ராம்குமாரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மோகன்ராஜ், ராம்பிரசாத் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து ராம்குமார் காவல் நிலையத்தில் முனியாண்டி, முத்துமாரி, மல்லிகா ஆகியோர் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியைக் கைது செய்தனர்.