முகப்பு
தமிழ்நாடு

காரைக்காலில் வீட்டு பூட்டை உடைத்துச் சென்று இளைஞர் கைது - உளவுப் பிரிவுனர், போலீஸார் நடவடிக்கை

காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்துச் சென்று உள்ளே இருந்த இளைஞரை மத்திய உளவுப் பிரிவினர், போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். உளவு வேலைகளில் ஈடுபட்டாரா, ஹவாலா  பணப் பரிமாற்றவாதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்துச் சென்று உள்ளே இருந்த இளைஞரை மத்திய உளவுப் பிரிவினர், போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். உளவு வேலைகளில் ஈடுபட்டாரா, ஹவாலா  பணப் பரிமாற்றவாதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெரியப்பேட் கிராமத்தில் இளைஞர் ஒருவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்துவருகிறார். அக்கம் பக்கத்தில் இருப்போருடன் இவர் பேசமாட்டார் எனவும், காரில் வருவதும், செல்வதுமாக இருந்துவந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் புதுச்சேரியிலிருந்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ( ஐ.பி), காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.கவாஸ், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆகியோர், குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று கதவை திறக்கக் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பின்னர் குழுவினர் எச்சரிக்கையின்பேரில் கதவு திறக்கப்பட்டது.  உள்ளே புகுந்த குழுவினர், அந்த இளைஞரை பிடித்து காரில் ஏற்றி வேகமாக சென்றுவிட்டனர்.

காரைக்காலை விட்டு அக்குழுவினர் அவரை வெளியூருக்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் போலீஸார், வீட்டில் உள்ளோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். வீட்டில் உள்ள கணினி, செல்போன் உள்ளிட்டவைகளை முடக்கியுள்ளனர்.

உளவு வேலையில் ஈடுபட்டாரா, ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் விசாரணைக் குழுவினர் விசாரித்துவருவதாக விசாரணைக் குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →