முகப்பு
தமிழ்நாடு

முந்தைய ஆண்டு தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் விற்பனை: ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆணை

2013-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தை, 2014-ம் ஆண்டு விற்பனை செய்து முறையற்ற வணிக நடைமுறையை பின்பற்றிய நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு, மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவிற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

2013-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தை, 2014-ம் ஆண்டு விற்பனை செய்து முறையற்ற வணிக நடைமுறையை பின்பற்றிய நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு, மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவிற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜபாளையம், அழகாத்தான்குளம் சாலையைச் சேர்ந்தவர் ரா.அய்யனார். இவர் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹீரோ கிளாமர் எஃ1 ரெட் பிளாக் வாகனம் வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக ராஜபாளையம், பஞ்சுமார்க்கெட்-மதுரை சாலையில் உள்ள தீபா மோட்டார்ஸ் நிறுவனத்தை அனுகியுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட வாகனம் இருப்பு இல்லை. முன்பணம் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் 1 வாரத்தில் வரவழைத்துத் தருவதாகக் கூறியுள்ளார்கள். இதற்காக 12.3.14-ம் தேதி முன்பணம் செலுத்தியுள்ளார். அன்று மாலையை நிறுவனத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகனம் வந்துவிட்டது. மீதித் தொகையை உடனே செலுத்தினால், உடனே டெலிவரி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள். இதன்படி முன்தொகை போக மீதமுள்ள தொகை ரூ.67,470-யை ரொக்கமாக அய்யனார் செலுத்தியுள்ளார். மேலும் ரூ.540-க்கு வண்டிக்கு உதிரி பாகங்கள் போட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக்தில் வாகனம் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் தரப்பட்டுள்ளது. பதிவு சான்றிதழில் குறிப்பிட்ட வாகனம் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் உற்பத்தி செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனைப் பார்த்த அய்யனார், இது புதிய வாகனம் இல்லை. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனை விற்பனை செய்த நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. 2013-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை தன்னை ஏமாற்றி விற்பனை செய்த நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது என்றும், வாகனத்தை எடுத்துக் கொண்டு புதிய வாகனத்தைத் தர வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அய்யனார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பு விவரம்:

இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்த நிறுவனம், வாகனத்தை விற்கும் போது அது 2013-ம் ஆண்டு வாகனம் என்பதை தெளிவுபடுத்தவில்லை. மேலும் பழைய மாடல் வாகனத்தை விற்கும்போது கொடுக்க வேண்டிய தள்ளுபடியையும் தரவில்லை. விற்பனை செய்த நிறுவனத்தின் செயலில் முறையற்ற வணிக நடைமுறை (Unfair Trade Practice) உள்ளது. ரூ.72,470-க்கு வாகனத்தை வாங்கும் போது குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாவது தள்ளுபடி தந்திருக்க வேண்டும். நிறுவனம் பழைய வாகனத்தை விற்பனை செய்ததற்கு அய்யனாருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடாக மனு தாக்கல் செய்த நாளிலிருந்து 9 சதவீதம் வட்டியுடன் 1 மாதத்திற்குள் வழங்க வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரமும், வழக்குச் செல்விற்கு ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →