முகப்பு
தமிழ்நாடு

போலி நிதி நிறுவனங்களை கண்டறிவது எப்படி? துண்டுப் பிரசுரம் விநியோகித்த போலிஸார்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில், போலி நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் போலீஸார் விநியோகித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:25 AM
பகிர்:

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில், போலி நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் போலீஸார் விநியோகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை வணிக குற்ற புலனாய்வுப் பிரிவு இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தன.

வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் பி.மனோகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் பி.மனோன்மணி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அசோகன், செல்வகுமார், மனோகரன் ஆகியோர் பொதுமக்கள், பேருந்து பயணிகளிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

துண்டுப் பிரசுரங்களில், போலி நிதி நிறுவனங்களை கண்டறிவது எப்படி, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.