விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டி
விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 13-ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி நேற்று நடைபெற்றது.
விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 13-ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி நேற்று நடைபெற்றது.
இப்பள்ளி வளாகத்தில் நடந்த விளையாட்டு விழாவிற்கு முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். அப்பள்ளியின் செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். துணை முதல்வர் உதயகுமாரி வரவேற்புரை வழங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக காமராஜர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியின் இயந்திர பிரிவு இணைப்பேராசிரியர் செந்தில், சாரண, சாரணீய இயக்கத்தின் மாவட்ட தலைவர் முத்துச்சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், மாணவ, மாணவிகள் யோகாசனத்தில் நடனபோட்டி மற்றும் நம் இந்தியா சுதந்திரத்திற்கு முன்பும், பின்னும் எவ்வாறு இருந்தது என்பதை செய்து காண்பித்தனர். அதேபோல், சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக் போன்றவைகளை செய்து பார்வையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினர். அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை வழங்கப்பட்டது. அதேபோல், இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும் அளிக்கப்பட்டது. இதில் நிறைவாக ஆசிரியை ஞானசௌந்தரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நி்ர்வாகத்தினர் செய்திருந்தனர்.