நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமை திறன் மேம்பாட்டு பயிற்சி
விருதுநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு முதல்வர் சீ.மோகன்ராம் தலைமை வகித்தார். இப்பயிற்சி முகாமில் ஒருங்கிணைப்பாளர், முதுநிலை விரிவுரையாளருமான கைலாசவாணி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு, திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை, பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், நல்ல உறவுமுறைகளை உருவாக்குதல், தகவல் தொடர்பு கொள்ளும் திறன், மன அழுத்த மேலாண்மை, மாணவ மாணவிகள் குழு உருவாக்கம், பணி அர்ப்பணிப்பு ஆகிய தலைப்புகளில் விரிவுரையாளர்கள் வெங்கிடசாமி, பழ.அழகப்பன், மகாலிங்கம், வட்டார வளமைய பயிற்றுநர்கள் பெத்தனசாமி, ரஹீம் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
Advertisement
இம்முகாமில் நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளி்ட்டோர் செய்திருந்தனர்.