பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொலம்பஸ் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொலம்பஸ் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
இக்கல்லூரி வளாகத்தில் நடந்த முாகமிற்கு செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஆனந்த் ஆச்சாரி, டீன் சாருகேசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கொலம்பஸ் அகெய்ன் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை அதிகாரி எம்.குபேரன் மென்பொருள் செயலி உருவாக்குவதற்கான தொழிற்பயிற்சியை வழங்கினார். அதைத் தொடர்ந்து தொழில் நுட்ப நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த மகாமில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான தொழிற்பயிற்சியை வழங்கியதோடு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மென்பொருள் தயார் செய்வது தொடர்பாகவும் எடுத்துரைத்த தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் குபேரனை பாராட்டி கல்லூரி நிர்வாகத்தினர் நினைவு பரிவு வழங்கினர்.
Advertisement