முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாமை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

Updated On : 15 செப்டம்பர், 2015 at 7:32 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:13 PM

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாமை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் வே.ராஜாராமன் பேசுகையில், ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் 12 இலக்கை தனிநபர் அடையாள எண் கொண்டதாகும். இந்த அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், அதனுடன் பெயர் முகவரி உள்ளிட்ட, புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படுகிறது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், ஆதார் எண் வங்கி சேவை, செல்லிடபேசி இணைப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்களையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.  இத்தகைய தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முகாம் அமைத்து எடுக்கப்படுகிறது.

Advertisement

இம்மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால், மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு ஒரு முகாம் அமைத்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இம்முகாம் குறி்தது பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டை எடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.