முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1500 போலீஸார் பாதுகாப்பு

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On : 16 செப்டம்பர், 2015 at 7:48 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:14 PM

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் சிலைகளை பிரதிஷ்டை வழிபாடு நடத்துவதற்காக குறைந்தது 5 அடி முதல் 15 அடி உயரம் வரையி்ல் விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருச்சுழி ஆகிய பகுதிகளில் மொத்தம் 263 இடங்களில் 330 விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட இடங்களில் வழிபாடு செய்வதற்காக  பிரதிஷ்டை செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதம் ஏற்பாடமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவும் உள்ளனர். இதில், ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 2 போலீஸார் வீதம் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்க அந்தந்தப் பகுதி காவல் நிலைய விவகார எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு-ஆய்வாளர் ஆகியோர் அடிக்கடி வாகன ரோந்து செய்து சரிபார்க்க வேண்டும்.

இக்குறிப்பிட்ட நாள்களில் பஸ் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.