முகப்பு
தமிழ்நாடு

எரிவாயு விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம்  தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On : 26 செப்டம்பர், 2015 at 7:42 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம்  தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எரிவாயு உருளை நுகர்வோர்கள் பயனடையும் வகையில் விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை களைவதற்காக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மேற்குறிப்பிட்ட நாளில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்க இருக்கிறார்.

அதனால், இக்கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தெரிவித்து தீர்வு காணலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.