முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானலில் தொடர் மழையால் மலைச்சாலையில் மரம் விழுந்தது

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலைச்சாலைகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மரங்கள் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிப்பு

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலைச்சாலைகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மரங்கள் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது நள்ளிரவில் மரங்களை அகற்றியதால் போக்குவரத்து சீரானது.

கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையான டைகர் சோலை, ஊத்து ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இரவு நேரமாக இருந்ததால் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இருப்பினும் பேருந்துகளிலும்,தனியார் வாகனங்களில் வந்திருந்தவர்களும் நள்ளிரவில் மலைச் சாலையில் மழையிலும்,குளிரிலும் வாகனங்களிலேயே காத்துக்கிடந்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சென்று விழுந்த கிடந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →