முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து 5 பேர் உயிர் தப்பினர்

விருதுநகர் அருகே ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதில் பயணம் செய்த மாத இதழ் பதிப்பாசிரியர் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Updated On : 27 செப்டம்பர், 2015 at 7:47 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

விருதுநகர் அருகே ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதில் பயணம் செய்த மாத இதழ் பதிப்பாசிரியர் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் டேவிட் கிங்ஸ்லி(60). இவர் வான் அமுதம் என்ற மாத இதழின் பதிப்பாசிரியராக இருந்து வருகிறார். இவர் உள்பட 5 பேர் சனிக்கிழமை கோவையிலிருந்து சிவகாசிக்கு சென்றனர். அங்கு சர்ச் வேலையை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிவகாசியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கோவையைச் சேர்ந்த அகஸ்டின்(45) ஓட்டினாராம். அப்போது, சிவகாசி-விருதுநகர் சாலையில் அருகே குமாரலிங்காபுரம் செல்லும் போது காரில் முன்புறம் இயந்திர பாகத்திலிருந்து புகை கிளம்பியுள்ளது.

இதையடுத்து உடனே ஆபத்தை உணர்ந்த ஓட்டுநர் உள்பட 5 பேரும் கீழே இறங்கி தப்பினர். அதையடுத்து சிறிது நேரத்தில் காரில் தீ மளமள பரவி முற்றிலும் எரிந்து  சேதமடைந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விருதுநகரில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

Advertisement

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.