முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் முற்றுகை!

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்க வலியுறுத்தி உதவிப் பேராசிரியர்கள் கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்க வலியுறுத்தி உதவிப் பேராசிரியர்கள் கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக 42 பேர் கடந்த 2014 இல் மார்ச் மாதம் பல்வேறுத் துறைகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

கல்லூரி நிர்வாகம் முறையாக கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அனுமதி பெறாமல்

பணி நியமனம் காரணம் போன்ற பல்வேறு காரணங்களால் பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களை பணி வரன்முறை செய்து அவர்களுக்கு கடந்த 2 வருடமாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

உதவிப் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்த கோப்புகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில் அவர்களை இணை இயக்குநரை சந்தித்து பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி சிந்துபூந்துறையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் திரண்ட உதவிப் பேராசிரியர்கள் முற்றுகையிட்டனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும். முற்றுகைப் போராட்டத்தை கைவிடுமாறு போலீஸார் தெரிவித்தனர். அப்போது போலீஸாருக்கும் உதவிப் பேராசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

பின்னர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீர்வு கிடைக்காததால் பிற்பகல் வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →