திருக்கோவிலூர் தொகுதியில் க.பொன்முடி வேட்புமனு தாக்கல்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், திமுக முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, திருக்கோவிலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சு.செந்தாமரையிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
அப்போது பேரூராட்சித் தலைவர்கள் ஏ.ஆர்.வாசிம்ராஜா, தேவிமுருகன், ஒன்றியச் செயலர் ஜி.ரவிச்சந்திரன், நகரச் செயலர் ஆர்.கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.