ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சதுரகிரியில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தமிழ்நாடுஆடி அமாவாசை: சதுரகிரியில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சதுரகிரியில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சதுரகிரியில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில் அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷத்தையொட்டி 3 நாள்கள் மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சதுரகிரி மலையில் உள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக்கோயில்களில் ஆடி அமாவாசை விழாவையொட்டி கடந்த 28-ம் தேதி முதல் சதுகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு மற்றும் குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே சதுரகிரி மலையடிவாரப் பகுதியான வண்டிப்பணணையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று காலை 3 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.காலை சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேறியதாலும், மலையில் பக்தர்களிடையே நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மலையேறினர்.
பல இடங்களில் போலீஸார் தடுப்புகள் அமைத்து பக்தர்களை நிறுத்திவைத்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அனுப்பினர். மலையடிவாரப் பகுதியிலும் சதுரகிரி மலையில் உள்ள திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.