நெய்வேலியில் வழிப்பறிக்கு முயன்ற மூவர் கைது
நெய்வேலி நகரிய உதவி ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார் நேற்றிரவு ஏழுடையான்பட்டு கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பண்ருட்டி: நெய்வேலி நகரிய உதவி ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார் நேற்றிரவு ஏழுடையான்பட்டு கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகையில் நால்வரும் தப்பி ஓட முயன்றனர். இவர்களில், தனவேல் 32, சுப்பிரமணியன் 25, ராஜதுரை செல்வகணபதி, கோபி ஆகிய நான்கு பேரை போலீசார் பிடித்தனர். இதில் கோபி என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களின் விசாரணை நடத்துகையில் வழக்கு செலவிற்காக அவ்வழியில் நகை அணிந்து வருபவர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் இருந்ததாகத் தெரிவித்தனர். இதைதொடர்ந்து மூவரையும் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய கோபியை போலீசார் தேடி வருகின்றனர்.