தமிழ்நாடு

பஞ்சாயத்து நிர்வாகத்தில் ஆட்சியர்கள் தலையிட தடை விதிக்க முடியாது: நீதிமன்றம்

DIN

மாவட்ட ஆட்சியர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மெய்யூர் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர், உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
பஞ்சாயத்து தலைவர்கள், துணைத் தலைவர்களின் காசோலை அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளில் ஒன்று. தமிழகத்தில் பெரும்பாலான பஞ்சாயத்துகளில் பெண்களே தலைவர்களாக இருந்துள்ளனர்.
சுமார் 27 மாவட்டங்களில் எங்களது கூட்டமைப்பு வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்களின் சிறப்பு அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எனவே காசோலை உள்ளிட்ட பஞ்சாயத்து தலைவர்களின் சிறப்பு அதிகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தலையிட தடை விதிக்க வேண்டும்.
பஞ்சாயத்து நிதியை கையாள மூன்றாவது நபர்களை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் மொத்தம் 120 பஞ்சாயத்து தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர காலங்களில் பஞ்சாயத்துக்களில் செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, காசோலை அதிகாரத்தைத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பஞ்சாயத்து தலைவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றாலும், அவர்கள் தங்களது கடமை, பொறுப்புகளை உணர்ந்து செயல்படுகிறார்களா? என்பதையும் நிர்வாக ரீதியாக விழிப்புடன் கண்காணிக்க வேண்டியுள்ளது.
என்னதான் சட்ட ரீதியாக அதிகாரப் பகிர்வு அளித்தாலும், பஞ்சாயத்து நிதியில் மோசடி செய்தல், கையாடல் செய்தல் போன்றவைகளும் நடக்கத்தான் செய்கிறது. எனவே ஒட்டு மொத்தமாக மாவட்ட ஆட்சியர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது. வழக்கின் தன்மையைப் பொருத்துதான் உத்தரவிட முடியும் எனக் கூறி, மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT