முகப்பு
தமிழ்நாடு

தமிழக மசூதிகளில் இயங்கி வரும் சட்டவிரோத 'ஷரியா' நீதிமன்றங்களுக்கு தடை: உயர்நீதி மன்றம் உத்தரவு!

தமிழகமெங்கும் உள்ள மசூதி வளாகங்களில் இயங்கி வரும் சட்ட விரோத 'ஷரியா' நீதிமன்றங்களுக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:36 AM
பகிர்:

சென்னை: தமிழகமெங்கும் உள்ள மசூதி வளாகங்களில் இயங்கி வரும் சட்ட விரோத 'ஷரியா' நீதிமன்றங்களுக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த  அப்துல் ரகுமான் என்னும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சிலானது ஒரு தனியான நீதிமன்றம் போலவே செயல்பட்டு வருகிறது. இங்கே திருமணம் தொடர்பான விவகாரங்கள் விசாரிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நபர்கள் அழைத்து, பேசி, விவகாரத்துக்கான ஆணைகளும் பிறப்பிக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன், 'இந்த வகையான ஷரியா நீதிமன்றங்கள் / கவுன்சில்களின் பிடியில் சிக்கி அல்லலுறும் அதிக அளவிலான அப்பாவி இஸ்லாமியர்களைக் கா க்கவே இந்த பொது நல மனு தாக்கல் செய்யயப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இத்தகைய கவுன்சில்களானது இஸ்லாமியர்களின் அடிப்படையான ஷரியத் சட்டப்படி செயல்படுவது போலவும், இதன்  தீர்ப்புகள் மத அடிப்படையில் அவர்களைக் கட்டுப்படுத்துவது போலவும் ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். 

அத்துடன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய தனக்கே கூட, இந்த ஷரியத் நீதிமன்றம் மூலம் விவாகரத்து கடிதம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று எடுத்துக் கூறினார்.

இவரின் வாதத்தைக் கேட்ட பிறகு  தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் அமர்வானது பிறப்பித்த உத்தரவில், 'எல்லா விதமான வழிபாட்டு தலங்களும் மத அடிப்படையிலான பணிகளுக்கு மட்டுமே என்று தெளிவு படுத்தி, தமிழகமெங்கும் உள்ள மசூதி வளாகங்களில் இயங்கி வரும் சட்ட விரோத 'ஷரியா' நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக நிலைமையை கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் உயர்நீதி மன்றத்தின் முதல் அமர்வு உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →