குணமடைந்தார் ராம மோகன ராவ்: தனி வார்டுக்கு மாற்றம்
நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ், குணமடைந்ததை அடுத்து, அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை: நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ், குணமடைந்ததை அடுத்து, அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதையடுத்து தலைமைச் செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சோதனையைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராம மோகன ராவுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சனிக்கிழமையன்று ராம மோகன ராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ், தற்போது குணமடைந்து இன்று காலை தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று ஒரு தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.