ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்: அமைச்சர் கே.டி.ஆர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
தமிழ்நாடுஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்: அமைச்சர் கே.டி.ஆர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அதிமுக சார்பில் வாக்காளர் சந்திப்பு விழிப்புணர்வு பேரணி நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமையில் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்து பிரமாண்டமான மேடையை சென்றடைந்தது.
மாநில மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீரா தனலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை யாரும் செய்ய முடியாத அளவுக்கு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துக் கொண்டிருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. அனைத்தும் ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் அடிப்படை வசதியிலிருந்து, வேலைவாய்ப்பு வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக ஆட்சிதான். மக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது இந்த ஆட்சியில்தான். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரையும் முதல்வராக நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை பல்வேறு துறைகளில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்காட்டியவர்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் பார்த்து மற்ற மாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்மாதிரியாக உள்ளார். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என்றார் அவர்.பேரணியில் கட்சியின் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.