சேலத்தில் இரு சக்கர வாகன விபத்தில் மருத்துவர் பலி
சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் இளங்கோவன் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் இளங்கோவன் உயிரிழந்தார்.
அண்ணா பூங்கா அருகே இன்று காலை இளங்கோவன் வந்த இரு சக்கர வாகனம், மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில், இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அம்மாபேட்டையில் இருந்து பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த போது இளங்கோவன் விபத்தில் சிக்கியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement