தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமையன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிஷ்யன்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித்திருவிழா  சனிக்கிழமையன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு சனிக்கிழமை திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30   மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3  மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில்  கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய மு.ஆனந்த விஸ்வநாதன் சிவாச்சாரியார் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாடினர்.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் தவத்திரு அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன்,   இந்து முன்னணி மாநிலத்தலைவர் அரசு ராஜா,  மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டியன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன் தேவார சபையினர்கள், பக்த கோடிகள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT