முகப்பு
தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில்  ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆரம்பப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணி, ஜேக்டோ அமைப்புடன் இணைந்து 3 நாட்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி்ங்கள்கிழமை முதல் அரசு ஊழியர்களுடன் இணைந்து அமைப்பின் சார்பில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அமைப்பின் மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் கூறியதாவது: கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளோம். இதில் தென்காசி, சங்கரன்கோவில், நான்குனேரி, வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர், மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்பட மாவட்டம் முழுவதும் 400 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை கூடுதலாக பங்கேற்போம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →