முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்: 3500 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3500 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3500 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசுத்துறையில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை சங்கம், நெடுஞ்சாலை, அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள், மருத்துவத்துறை தொழில்நுட்பர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆரம்ப பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர்களுடன் இணைந்து திங்கள்கிழமை முதல் தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். ராஜேஸ்வரன், தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில செயலர் சோ. முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் குருசந்திரன், மருத்துவத்துறை தொழில்நுட்னர் சங்க மாநில செயலர் பார்த்தசாரதி, ஆசிரியர் கூட்டணி அமைப்பின் மாநில செயலர் மணிமேகலை மற்றும் 384 பெண்கள் உள்பட 482 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அம்பாசமுத்திரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலில் பங்கேற்ற அரசு ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் ராஜ்கோபால் மற்றும் 396 பெண்கள் உள்பட 438 பேர், தென்காசியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலில் அமைப்பின் நிர்வாகி சண்முகசுந்தரம் தலைமையில் 995 பெண்கள் உள்பட 1060 பேர், சங்கரன்கோவிலில் அரசு பொதுப்பணித்துறை மாளிகை முன்பு நடைபெற்ற மறியலில் 420 பெண்கள் உள்பட 520 பேர் கைது செய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் 4 இடங்களில் 2195 பெண்கள் உள்பட 3500 பேர் கைது செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →