முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் சோகம்: மகாமகத்தில் பங்கேற்று திருப்பும்போது வேன் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

திருச்சி அருகே பெல் நிறுவனம் அருகே ஆம்னி வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

திருச்சி அருகே பெல் நிறுவனம் அருகே ஆம்னி வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் இருந்து ஆம்னி வேனில் கும்பகோணம் மகாமகம் விழாவில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பெல் நிறுவனம் அருகே கனேஷா என்ற இடத்தில் வேன் வந்துக்கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சிந்தாமணி (60), ஜெயம்கணி (4) உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காத்யாயினி (27), விஜயா (40), சரவணன் (32), ராஜேஸ்வரி (80), டிரைவர் செல்வராஜ் (35) உள்ளிட்ட 7 பேர் பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, பெல் நிறுவன போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.