முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் காங்கிரஸ் கட்சி நேர்காணல்: 157 பேர் பங்கேற்பு

திருநெல்வேலியில் புதன்கிழமை பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

திருநெல்வேலியில் புதன்கிழமை பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

தமிழக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் அந்தந்த மாவட்டங்களில் புதன்கிழமை நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திருநெல்வேலி கொக்கிரகுளம் கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.

இம்மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் நிர்வாக ரீதியாக மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத் தலைவர்கள் கே. ராம்நாத், அ. தமிழ்செல்வன், எஸ்.கே.டி.காமராஜ் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் செய்தி தொடர்பாளரும் இரட்டைமலை சீனிவாசனின் கொள்ளு பேத்தியுமான நி்ர்மலாஅருள்பிரகாஷ், விருப்ப மனு அளித்தவர்களிடம் தனித்தனியே நேர்காணல் நடத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுள்ளது. எனவேதான் கூட்டணி உறுதி செய்யாத நிலையில் திராவிட கட்சிகளுக்கு இணையாக பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மனு அளித்துள்ளனர்.

நேர்காணலில் தொகுதியில் கட்சியின் பலம், கூட்டணி கட்சிகளின் பலம், வாக்கு வங்கிகள் குறித்த தகவல்களை நேரடியாகவும், எழுத்து மூலமும் பெற்றுக் கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →