திருவதிகை வீரதானேஸ்வரர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார் புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பண்ருட்டி, திருவதிகையில் உள்ள அருள்மிகு வீரதானேஸ்வரர் கோயிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர், பண்ருட்டி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
பண்ருட்டி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பண்ருட்டி, திருவதிகையில் உள்ள அருள்மிகு வீரதானேஸ்வரர் கோயிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர், பண்ருட்டி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கச்சத்தீவை மீட்டெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்வதை கண்டித்தும் பிரதமர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதை போன்று புதுச்சேரியிலும் ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.