ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து ஆசிரியைகளைத் தாக்கி வழிப்பறி: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து ஆசிரியைகளைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச்....
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து ஆசிரியைகளைத் தாக்கி வழிப்பறி: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து ஆசிரியைகளைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச்....
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து ஆசிரியைகளைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் செல்பவர்களை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்காததும், சில புகார்களில் வழக்குப் பதிவு செய்யாததும் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் காவல்துறைக்கு உள்ள நன்மதிப்பை சீர்குலைக்கும் நிலையில் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோ.மணிவண்ணன் மற்றும் விருதுநகர் மாவட்டப் பொருளாளர் சு.குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் அரசுப் பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியை முத்துமாரி என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தாக்கி 6 பவுன் செயினைப் பறித்துச் சென்ற வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படாமல் வன்னியப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மாயத்தேவன்பட்டியில் வேலை செய்யும் ஆசிரியை வனிதாவைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்ற வழக்கும் இதே காவல் நிலைய எல்கைக்குள் நடைபெற்றது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை இதுவரை இல்லை. இம் மாதம் 10-ம் தேதி ஆசிலாபுரத்தில் ஆசிரியைத் தாக்கி நகையை பறித்துச் சென்ற சம்பவம் நடைபெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திங்கள்கிழமை (11-ம் தேதி) சென்னாக்குளத்திலிருந்து நாகபாளையம் பள்ளிக்கு காலையில் ஆசிரியை ஸ்ரீமதநாயகி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கழுத்தில் கருப்பு பாசி அணிந்திருந்த்தைப் பார்த்துச் சென்ற கொள்ளையர்கள், திரும்ப வந்த அவரை தாக்கி தள்ளிவிட்டுவிட்டு, அவரது கைப் பை மற்றும் செல்லிடைபேசியை பறித்துச் சென்றுள்ளார்கள்.
அதில் பணமும் இருந்துள்ளது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆசிரியர்கள் போய் கேட்டபோது, அதிகமான வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், மேல் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. பொறுங்கள் வழக்குப் பதிவு செய்வோம் என்கிறார்கள்.பல பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிப்பறி சம்பவங்களால் பாதிக்கப்பட்டும், காவல்துறையின் கெடுபிடி காரணமாக காவல் நிலையமே செல்லாமல் இருக்கும் நிலை ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் உள்ளது.இது குறித்து மேல் முறையீடு செய்ய விருதுநகர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இருந்த நிலையிலே நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களுக்கு இதுவரை விடையில்லை. தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளரும் இல்லை.தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையில், சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களை நியமித்து, இப் பகுதியில் அச்சமின்றி பொதுமக்கள் ஆசிரியர்கள் நடமாட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழிப்பறிச் சம்பவங்கள் நடக்காமல் தீவிர ரோந்துப் பணியில் போலீஸாரை ஈடுபடுத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.