தமிழ்நாடு

ஜூன் 6-ல் ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

அண்மையில் நிறைவடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, வருகிற 6 ஆம் தேதி தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

தினமணி

சென்னை: அண்மையில் நிறைவடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, வருகிற 6 ஆம் தேதி தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வருகிற 6 ஆம் தேதி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்கிறார்.

புரட்சித் தலைவர் ஆழுசு சிலை - பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, சூரியநாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை.

கிராஸ் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு-வ.உ.சி. சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு.

வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம்-எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை- ஜெ.ஜெ.நகர் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, மகாராணி தியேட்டர் ஆகிய இடங்களில் முதல்வர் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT