புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக காந்தி திடலில் பதவியேற்பு விழா
புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி கடற்கரையை அடுத்துள்ள காந்தி திடலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி: புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக காந்தி திடலில் பதவியேற்பு விழா
புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி கடற்கரையை அடுத்துள்ள காந்தி திடலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி மாநில 19வது முதல்வராக ஜி. நாராயணசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் அமைச்சர்களாக ஏ. நமச்சிவாயம், பல்லாடி கிருஷ்ணாராவ், எம். கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பொன்முடி, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், தில்லா ரெட்டி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.