புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டப்பேரவையின் தாற்காலிக தலைவர் வி.பி. சிவகொழுந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், திமுக எம்எல்ஏக்கள் இருவர், சுயேச்சை ஒருவர் உட்பட 21 எம்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் 11ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தாற்காலிகத் தலைவர் சிவகொழுந்து தெரிவித்தார்.