முகப்பு
தமிழ்நாடு

சுவாதி தொடர்பாக கற்பனை செய்தி வேண்டாம்: ராமதாஸ்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி தொடர்பாக கற்பனை செய்திகளை வெளியிட வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி தொடர்பாக கற்பனை செய்திகளை வெளியிட வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  

அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்,அவரது கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும் அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

  சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல் எழுப்பியிருந்தாலோ  தங்களின் கைகளில் கிடைத்த பொருளை வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம் ஏற்பட்டிருக்கக் கூடும். சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும்.

 ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும் வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →