நெல்லையில் இந்து மக்கள் கட்சி வேட்பாளர் நூதனப் பிரசாரம்!
திருநெல்வேலியில் சனிக்கிழமை தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி வேட்பாளர் வாயில் கறுப்புத் துணி கட்டி வாக்குசேகரித்தார்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சனிக்கிழமை தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி வேட்பாளர் வாயில் கறுப்புத் துணி கட்டி வாக்குசேகரித்தார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் அக்கட்சியின் மாவட்டத்தலைவர் எஸ். உடையார் போட்டியிடுகிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து உடையார் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் கோயில் முன்பு கட்சியின் நிர்வாகிகள் கணபதி, ராமராவ் உள்ளிட்டோர் வாயில் கறுப்புத் துணிக் கட்டி அவர்கள் வாக்குசேகரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது போலீஸாருக்கும் இந்து மக்கள் கட்சியினர் இடையே வாக்குவாதம் எழுந்தது.