முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கருத்தறிந்து முதல்வர் தேர்வு: வைத்திலிங்கம் விளக்கம்

புதுவை சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கருத்தறிந்து புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:21 PM
பகிர்:

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கருத்தறிந்து புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது.

முதல்வர் பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் தில்லியில் முகாமிட்டு, முதல்வர் பதவியை பெறுவதற்காக மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசினார். இதன் காரணமாக திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தில்லியில் இருந்து நமச்சிவாயத்திற்கு அவசர அழைப்பு வந்ததன் பேரில் அவர் சென்று, கடந்த 3 நாட்களாக அங்கு தங்கி சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் புதுதில்லியில் இருந்து நாராயணசாமி வியாழக்கிழமை புதுச்சேரி திரும்பினார்.

முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் வீட்டில் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

பிறகு வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் விரும்பும் வகையில் இன்னும் ஒரிரு நாட்களில் முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.

முதல்வர் பதவிவை யாருக்கு கொடுப்பது குறித்து மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் புதுச்சேரி வர உள்ளனர்.

அவர்கள் வந்த பிறகு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். அதில் அவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகு அறிவிப்பார்கள். மேலும் காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏதும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். முழுமையான ஜனநாயகம் அடிப்படையில் முதல்வர் தேர்வு நடைபெறும் என்றார் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.