தமிழ்நாடு

தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்னடைவு: மு.க.ஸ்டாலின், அன்புமணி கண்டனம்

தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

DIN

தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: தொழில் தொடங்குவதற்கு ஏற்ற 340 அம்ச தொழில் சீர்திருத்தத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, மத்திய அரசின் தொழில் துறை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தமிழகம் 18-ஆவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 எனும் ஆடம்பர மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய தொழில் முனைவோர் முன் வந்ததாகவும் கூறப்பட்டது. அவற்றை தமிழக அரசால் பெறமுடியவில்லை. எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ ஒரு துரும்பைக் கூட அந்த மாநாடு எடுத்துப் போடவில்லை.
இனியாவது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்கத் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களை உடனடியாக நிறைவேற்றி, தமிழகம் தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக மாற ஆக்கப்பூர்வமான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அன்புமணி: நாட்டின் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என 36 நிர்வாகங்கள் கொண்ட பட்டியலில் தமிழகம் 18-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களை மட்டும் கணக்கில் கொண்டால் தமிழகத்துக்குக் கடைசி இடமே கிடைத்துள்ளது.
தொழில் வளர்ச்சிக்கு எந்தத் திட்டங்களையும் வகுக்காமல், வெற்று அறிவிப்புகளை மட்டுமே தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, தொழில்துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்க முற்போக்கானத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் தீப்பற்றி புகைமூட்டம்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

SCROLL FOR NEXT