முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்றங்களில் கேமரா அமைக்க நிதித் துறை ஒப்புதல்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க தமிழக அரசின் நிதித் துறை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க தமிழக அரசின் நிதித் துறை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.காசிராமலிங்கம் தொடர்ந்து பொதுநல வழக்கு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை தொடர்பாக பதில் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதில், அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக அக்டோபர் 17-ஆம் தேதி அனுப்பப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்க அரசு நிதித் துறையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான அரசாணையை வெளியிட 2 வார கால அவகாசம் அளிக்க வலியுறுத்தியிருந்தார். இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →