முகப்பு
தமிழ்நாடு

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக மேலும் 18 தமிழர்கள் கைது!

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 23 நவம்பர், 2016 at 2:13 PM
பகிர்:

சென்னை: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆந்திர மாநில காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சத்யா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஆந்திரா மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட முயன்றதாக இன்று மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1 டன் செம்மரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே 35 பேர் இதே போல் கைது செய்யப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 53 பேரில் 21 பேர் சேலத்தைச் சேர்ந்தவர்கள்.  20 பேர் விழுப்புரத்தைச்  சேர்ந்தவர்கள். திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலில் இருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு ஏ .எஸ்.பி சத்யா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.