முகப்பு
தமிழ்நாடு

பாதுகாப்பு படை அதிகாரியுடன் தகராறு: சென்னை வழக்கறிஞர்கள் 9 பேர் ஒருவருடம் சஸ்பெண்ட்!

சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை  அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், சென்னை வழக்கறிஞர்கள் 9 பேரை  ஒரு வருடம் சஸ்பெண்ட்.. 

தமிழ்நாடு

பாதுகாப்பு படை அதிகாரியுடன் தகராறு: சென்னை வழக்கறிஞர்கள் 9 பேர் ஒருவருடம் சஸ்பெண்ட்!

சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை  அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், சென்னை வழக்கறிஞர்கள் 9 பேரை  ஒரு வருடம் சஸ்பெண்ட்.. 

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பபு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை  அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், சென்னை வழக்கறிஞர்கள் 9 பேரை  ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்து கர்நாடக பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறையில் வழக்கறிஞர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்களை கொண்டு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முதல் ஐகோர்ட்டுக்கு சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த பாதுகாப்பு பணியின் பகுதியாக நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ படம் எடுத்தனர். இதில் ஒரு பெண் வக்கீலை படம் எடுத்தபோது உருவான பிரச்சினையில் வழக்கறிஞர்கள் சிலர் சி.ஐ.எஸ்.எப். வீரர்களை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது பெண் அதிகாரி ஒருவரை வழக்கறிஞர்கள் அசிங்கமாக திட்டியதாக புகார் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற பரிந்துரையின் படி, போராட்டத்தில் ஈடுபட்ட 9 வக்கீல்கள் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. அவர்களை  தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்தது. இவர்கள் மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரணை நடத்த பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

திடீர் திருப்பமாக இந்த விசாரணையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் இருந்து கர்நாடகா பார் கவுன்சிலுக்கு மாற்றம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.

இதனை விசாரித்த கர்நாடகா பார் கவுன்சில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து. பின்னர் தனது தீர்ப்பை நேற்று பிறப்பித்தது. அதன்படி போராட்டம் நடத்திய 9 வக்கீல்களையும் ஓராண்டுக்கு வக்கீல் தொழிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →