முகப்பு
தமிழ்நாடு

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு திரும்பப் பெறும் வரை போராட்டம்: முதல்வர் நாராயணசாமி

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 28 நவம்பர், 2016 at 4:09 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:18 AM


புதுச்சேரி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து மக்களை அலைக்கழிப்பதாக பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, 28ம் தேதி புதுச்சேரி அனைத்து தொகுதிகளிலும் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள எச்டிஎப்சி வங்கி முன்பு முதல்வர் நாராயணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்திய நாட்டு பணப்புழக்கத்தில் 86 சதவீதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள்தான். மீதி 14 சதவீதம் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகளும், சில்லறைகளும் உள்ளன.

Advertisement

ஆனால் பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று கூறிவிட்டு ரூ.2000 வெளியிட்டார். பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொன்னார். ஆனால் இப்போது நோட்டுகளை மாற்ற கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.

ரூபாய் நோட்டு பிரச்னையால் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள். காய்கறி கடை, சிறு வியாபாரிகளுக்கு வியாபாரம் இல்லாமல் போய்விட்டது. திருமண நேரத்தில் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் செலவு செய்ய கூடாதென்று பிரதமர் கூறுகிறார். அந்த பணத்தை எடுப்பதற்கு எல்லா ஆதாரத்தையும் கொடுக்க வேண்டுமாம்.
இதுமட்டுமல்லாமல் தாலி கட்டும் வரை வீடியோ எடுக்க வேண்டும். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த ஜனார்த்தனன் ரெட்டி தன்னுடைய பிள்ளைக்கு ரூ.600 கோடிக்கு திருமணம் செய்கிறார்.

ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை வியாபரம் நடந்த கடையில் இன்று ரூ.5000 அளவுக்கு வியாபரம் குறைந்துவிட்டது. காரணம் மக்கள் கையில் பணம் இல்லை. ஏழை மக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்து பணம்,

கருப்பு பணம் என்றால் என்ன அர்த்தம். விவசாயிகளுக்கு வருமான வரி கிடையாது. ஆனால், விவாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முடியவில்லை. உரம் வாங்க முடியவில்லை. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்க முயன்றால் அதில் காற்றுதான் வருகிறது. ஏடிஎம்-ல் பணம் இல்லை. வங்கியில் கேட்டால் புதிய ரூ.500 நோட்டு வரவில்லை என்கின்றனர்.

நாட்டில் 4 சதவீதம் பேர்தான் கருப்பு பணம் வைத்துள்ளனர். 96 சதவீதம் மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் வைத்துள்ளனர். அதனை கூட எடுக்க முடியவில்லை.

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் புழக்கத்தில் இருந்த 86 சதவீத நோட்டுகள் எடுக்கும்போது, அதேமாதிரி புதிதாக 86 சதவீதம் நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு பிரச்னையால் இதுவரை 85 பேர் இறந்துள்ளனர். பிரதமர் மோடி எடுத்த முடிைவ மாற்ற மாட்டேன் என்கிறார். இதனால் அவருக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அவர் தனது அறிவிப்பை வாபஸ் வாங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மக்களுக்கு இப்போதே மோடி பதில் சொல்லி ஆக வேண்டும். பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார். வெளிநாடு மற்றும் வெளியிடங்களில் பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேச வருவதில்லை என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.