முகப்பு
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் விடுதலை

புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் 2 படகுகளில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைதாகி, பிறகு எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்.

Updated On : 4 அக்டோபர், 2016 at 12:24 PM
பகிர்:


புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் 2 படகுகளில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைதாகி, பிறகு எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இரண்டு படகுகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். பிறகு அவர்களை எச்சரித்து விடுதலை செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்லவில்லை. அதன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதனால்தான் எச்சரித்து அனுப்பியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

Advertisement

அவர்கள் இன்று மாலை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.