ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கான சங்க நிர்வாகி எஸ்.பி. ராயப்பன் கூறுகையில், இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர். அதிர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் பாம்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாம்பம் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.