தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் திமுக-வினர் ஆயிரம் பேர் பங்கேற்ற ரயில் மறியல்

திமுக மற்றும் காங்கிரஸ், தமாக கட்சிகளை ஆயிரம் பேர் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜான்பிரான்சிஸ்



கும்மிடிப்பூண்டி: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க கோரியும், காவிரி நீர் பங்கிடு பிரச்சனையில் மத்திய அரசின் ஒரு தலைபட்சமான செயல்பாடுகளை கண்டித்தும் திமுக மற்றும் காங்கிரஸ், தமாக கட்சிகளை ஆயிரம் பேர் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க கோரியும், காவிரி நீர் பங்கிடு பிரச்சனையில் மத்திய அரசின் ஒரு தலைபட்சமான செயல்பாடுகளை கண்டித்தும் மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், ஊத்துக்கோட்டை, சோழவரம், ஆரணி, பள்ளிப்பட்டு, பூண்டி, திருத்தணி ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக-வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பயணசீட்டு மையத்தில் கூடிய திமுக-வினர் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி மாணிக்கவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் தடுத்து நிறுத்திய போது திமுக-வினர் போலீஸாரின் தடைகளை தாண்டி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து திமுக-வினர் ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த பயணிகள் ரயில்வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் நடத்த இந்த ரயில் மறியல் போராட்டத்தினால் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸார் மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக-வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT