நாகப்பட்டினம்: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை சென்னையில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள்குக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக பொது மேலாளர் எஸ். கௌரிஷங்கர் இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், அக்டோபர் 26, 27, 28ம் தேதிகளில் 24 மணி நேரமும் சென்னையில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
அக்டோபர் 26ம் தேதி 111 பேருந்துகளும், 27ம் தேதி 163 பேருந்துகளும், 28ம் தேதி 146 பேருந்துகளும் கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.